How internet works?இணையதளம் எவ்வாறு வேலை செய்கிறது?
நம்முடைய ஒரு நாளில்,பாதி நாள் இணையத்தில் தான் இருந்து வருகின்றோம். தற்போது
நாளுக்கு நாள் நமக்கு இணையத்தின் தேவை அதிகரித்து கொண்டே வருகின்றது.அது
எவ்வாறு இயங்குகிறது என்பதை இப்பகுதியில் காண்போம்.
இந்த பகுதியையும் கூட இணையத்தின் உதவி உடனே நாம் பார்த்து
வருகின்றோம்.இந்த பகுதி எவ்வாறு Google உடைய தகவல் மையத்தில்(data center)
இல் இருந்து வருகின்றது.அதாவது பல்லாயிரம் மைல் கள் தாண்டி வர வேண்டியதாக
உள்ளது.இது ஒரு மிக பெரிய நிகழ்வு ஆனால் நாம் இரு முறை கண் இமைக்கும்
நேரத்திற்குள் இது நடந்து விடுகிறது. நம்மில் சிலரும் இது செயற்கை கோள்
மூலமாகத்தான் நடகின்றது என்று நினைத்து இருப்போம். ஆனால் அது தான் கிடையாது.
முன்னதாகவே கூறிய வாரு தகவல் மையம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து மேலும்
பலாயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி செயற்கைக் கோள்ஐ அடந்து நமக்கு
தேவையான தகவல் வந்தடைய தாமதம் ஆகிவிடும். எனவே அதற்கு ஒரு மாற்று வழி ஒன்று
உள்ளது.
Data center( தகவல் மையம்)
தகவல் மையத்தில் ஒரு சேவையகம் (server)அமைந்து இருக்கும்.அந்த சேவையகத்தில்
திடனிலை வட்டு(Solid State Disk) ஒரு சேமிப்பு மையம் ஆக செயல்படும். நம்மில்
பலருக்கும் ssd அதிவேகமாக செயல்படும் என்பது தெரியும்.இந்த சேவயகதின் வேலை
நமக்கு தேவையான தகவல்களை தருவது மட்டுமே.
ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (Optical Fiber cable)
ஆப்டிகல் ஃபைவர் கேபிள் என்பது ஒரு வகையான கடத்தி . இதன் முக்கிய அம்சம் ஒளி
துடிப்பை(light pulse) ஐ மிக வேகமாக கடத்தும் இது ஒவ்வொரு ஊர்களில் பூமிக்கு
அடியில் பதிக்கபட்டு இருக்கும். பூமி மட்டும் இன்றி கடல், மலை போன்ற
இடங்களில் பதிக்க பட்டு இருக்கும்.இதை நாம் பல இடங்களில் கண்டு உள்ளோம்.
பேருந்தில் செல்லும் போது திட்டுகளில் optical என்று எழுதி
இருப்பார்கள்.இது இணையத்தின் முதுகு எலும்பு ஆக செயல்படுகிறது.
ஐபி முகவரி
நாம் அனைவரின் தொலைபேசிகளில் இணைய வசதி இருக்கும். ஒவ்வொரு தொலைபேசி
அல்லது கணினி களிலும் இந்த முகவரி இருக்கும் அதாவது நான்கு புள்ளிகளை
கொண்டுள்ள எண்.எடுத்துக்காட்டு 000.000.000.000 இந்த அமைப்பில் இருக்கும்.இது
தான் நம்முடைய தொலைபேசிக்கு தனியாக உள்ள முகவரி என்று கூறுவர். இது நம்மடைய
இணைய சேவை வழங்குபர்கள்,நமக்கு தனியாக ஒரு முகவரியை வழங்கி
விடுவார்கள்.
எடுத்துக்காட்டு: உங்கள் வீட்டிற்கு தபால் நிலையத்தில் இருந்து ஒரு கடிதம்
வருகின்றது. அதில் உங்கள் வீடு எண் வைத்து மட்டுமே உங்களுக்கு அந்த கடிதத்தை
அளிப்பார்கள்.இதுவே வேறு எண் அதில் இருந்தால் உங்களுக்கு தேவையான அந்த கடிதம்
வேறு இடத்துக்கு சென்று விடும். அதைபோன்று தான் உங்களுக்கு தேவையான தகவல் களை
இந்த ஐபி முகவரி மூலம் உங்களை வந்தடைகிறது.
இதை போன்று தான் தகவல் மையத்தில் (data center) உள்ள அனைத்து தகவல்
கலுக்கும் இது போன்ற ஒரு முகவரி உள்ளது.
டொமைன் நேம் ( domain name)
நாம் இந்த வகையான எண்களை நினைவில் வைத்து கொள்வது மிகவும் கடினமான ஒன்றே.
அதற்காக தான் இந்த சேவை தொடங்கப்பட்டது.இது நமக்கு மிக பெரிய மாற்றாக
அமைந்து இருக்கும். தகவல் மையத்தில் மிக அதிக அளவில் ஆன டொமைன் நேம் பதிவாகி
இருக்கும். நமக்கு தேவையான ஒன்றை நாம் இணையத்தில் தேடும் போது அனைத்து
வலைப்பதிவுகளில் இருந்து நமக்கு கிடைக்காது எனவே அதற்காக தான் ஹோஸ்ட் சேவையை
இணையதளம் பயன்படுத்துகிறது.
Domain name server system (டொமைன் பெயர் சேவை மையம்)
இந்த அனைத்து வகையான டொமைன் பெயர்களையும் சேமிப்பில் வைப்பதற்கு இந்த
மையம் செயல்படுகிறது. இதில் அனைத்து வகையான டொமைன் நேம்களு ம் பதிவாகி
இருக்கும். இந்த மையம் சேவை வழகுபவர்கள் (services provider) மூலம்
கண்காணிக்கபடுகிறது.
மேல் உள்ள அனைத்து ஒரு அடிப்படையான விஷயங்கள் மட்டுமே. இப்போது
என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்போம்.
இணையம் எவ்வாறு வேளை செய்கிறது??
- முதலில், நீங்கள் உங்களுக்கு தேவையான தகவல்ஐ பெற Google இடம் டொமைன் பெயர் அல்லது முக்கிய சொல்ஐ பதிவு செய்கிறீர்கள்.
- அடுத்து ஐபி முகவரி பெறுவதற்கு DNS மையத்திற்கு தெரியப்படுதும்.
- ஐபி பெற்ற பின் உங்கள் உலாவி (browser) தகவல் மையம்(Data Center)குக் தெரிய படுத்தும்.
- இந்த கோரிக்கைகள் அனைத்தும் 0 மற்றும் 1 என்ற அமைப்பின் மூலம் ஒளி துடிப்பு (light pulse) ஆக மாறி ஆப்டிகல் கேபிள் மூலம் தகவல் மையத்தை சென்று அடையும்.
- தகவல் மையத்தில் இந்த 0 மற்றும் 1 படித்த பிறகு இதற்கு தகுந்த வாரு தகவல்களை ஆப்டிகல் கேபிள் உதவியுடன் உங்களை வந்தடையும்.
மேல் உள்ள அனைத்தும் ஒரு படிப்படியான செயல் மட்டுமே. பின்னால் நடக்கும்
செயல் ஐ தெளிவாக கீழ் காண்போம்.
பின்னால் நடப்பது.
நாம் ஒரு கோரிக்கை ஐ தரும் போது அது தகவல் மையத்திற்கு கேபிள் வழியாக சென்று
அடையும். தகவல் மையத்தில் இருந்து உங்களுக்கு 0 மற்றும் 1 ஒன்று என்ற
அமைப்பின் மூலம் செல்லதயார் ஆக இருக்கும் . நீங்கள் இணையதளத்தை Wifi மூலம்
இணைத்து இருந்தால் அது உங்களை நேரடியாக வந்து அடையும். ஒரு வேளை நீங்க
உங்கள் தொலைபேசி மூலம் இணையத்தை பயன்படுத்தி கொண்டு இருந்தால். உங்கள்
அருகாமையில் உள்ள இணைய கோபுரம்(Tower) இல் வந்தடைந்து மின் காந்த அலைகள்
மூலம் உங்களை வந்தடையும்.
0 மற்றும் 1 அமைப்பு(0's and 1's)
- 0 மற்றும் 1 என்ற அமைப்பு மிகவும் பெரிய அமைப்பு. இது எவ்வாறு வருகிறது என்றால், நீங்கள் தரும் கோரிக்கை என்றுகொண்ட பிறகு அந்த தேவையான தகவல்கள் 0,1 என்ற அமைப்பில் தனியாக பிரியும்.
- இது மிகப்பெரிய தரவு சேகரிப்பு ஆகும்.
- இந்த தகவல் சிறு துண்டுகளாக பிரியும் 001110 000111 000111 இது போன்ற 6 அமைப்பு ஆக பிரியும். இந்த ஒவ்வொரு அமைப்புகளுக்கும் ஒவ்வொரு வரிசை எண் அமைத்து பகுதிகளாக பிரியும்.
- இந்த அமைப்பு ஒரே வழிஇல் வர வேண்டும் என்று அவசியம் இல்லை எந்த பகுதி எளிமையாக உள்ளதோ அந்த வழியில் எல்லாம் வரும். வந்த பிறகு service provider மூலம் ஒன்றன்பின் ஒன்றாக ஒதுக்க படும்.
ஒதுக்க பட்ட உடன் இது உங்கள் முன் காண்பிக்கும்.
புரோட்டோகால்(Protocol ex. TCP/IP)
ஒரு வேளை பிரிந்த 0மற்றும்1 அமைப்பு வேறு இடத்துக்கு செல்லாமல் இருக்க இந்த
சேவை பயன்படுத்த படுகிறது.இந்த அமைப்பு தான் பிரிந்த 0 மற்றும் 1 ஐ சரியா
என்று பார்த்து பின் நமக்கு காண்பிக்கும்.
Post a Comment
Post a Comment