advertisement

About Us

The Best site to learn Information Technology and Programming language in Tamil And English Language. And Also we provide advice for you to buy the best products online.....

Advertisement

Responisive ad

Python Basics.தமிழில் Python கற்றுக்கொள்ளுங்கள். Python Tutorial.

إرسال تعليق

Learn Python Tutorial In Tamil.

Python என்றால் என்ன?

Python என்பது தற்போது வளர்த்து வரக்கூடிய மிகவும் எளிமையான  programming மற்றும் அனைவரும் புரிந்துகொள்ளகூடிய முறையில் வடிவமைக்க பட்டு உள்ள மொழி ஆகும். இதை தற்பொழுது பலரும் பலவேறு முறையில்  கற்றுக்கொண்டு வருகின்றனர்.மேலும் மென்பொருள் பொறியாளர் களுக்கு மிகவும் முக்கியமான programming மொழி ஆக python திகழது வருகிறது.ஆனால் சில மாணவர்களுக்கு ஆங்கில மொழி இல் கற்று கொள்ள  முடிய வில்லை. எனவே இதில் எளிமையான முறையில் Python ஐ தமிழில் கற்று தர போகிறேன்.


Python

உயர்  மட்ட மொழி.(high-level language)
Interpreter language and  Dynamically typed language(சுய பகுப்பாய்வு) என்று கூறுவர். 
முதலில் நாம் data types இருந்து கற்று கொள்ளலாம்.

Data types. 

Data types என்பது python- இல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதில் பல்வேறு வகையான பிரிவுகள் உள்ளன.அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
1)Numbers
2) strings
3)Lists
4) Dictionary
5)Tuples
6) Files 
7)Sets
8)Boolean

1) Numbers

Numbers என்பது  ஒரு variable- குள் நாம் சாதாரண நம்பரை சேமித்து வைப்பது தான்( Variables பற்றி பின்னர் காண்போம்).

Working with numbers

Example 1:

     my_num=5 
     print(my_num)

Output : 5 
இதில் my_num என்பது variable எனபடும். (Variables பற்றி தெளிவாக பின் காணலாம்.)
5 என்ற எண் my_num என்ற variable- குல் சேமிப்பு ஆகி உள்ளது. Print என குறிப்பிட்டு அதற்குள் என்ன மதிப்பு கொடுகிரோமோ அது நமக்கு வெளியீடாக (output) வரும்.

Example 2:

    my_num=5 
    print(abs(my_num))

Output: 5 

இதில் abs என குறிப்பிட்டுள்ளது absolute என பொருள் படும். அதாவது குறிப்பட்ட எண் உள்ளவாறே நமக்கு கிடைக்கும்.

Example 3:

    my_num=5
    print (pow(3,5)) 
       Output : 15 
இதில் 3இன் அடுக்கு 5 என பொருள்படும்.(3^5)

Example 4:

    print(max(5,8))
    Output : 8
இதில் எது மிக அதிகமான number என  குறிக்கும்.

Example 5: 

    print(round(3.7))
    Output : 4
Round என்பதன் பொருள் கொடுத்துள்ள floating value வை ஒற்றை எண்ணாக மாற்றும். (floating என்பது . - ஐ குறிக்கும் அதாவது 2.4 , 7.5 போன்ற எங்களை குறிக்கும்). அல்லது மேலே உள்ளபடி number 3.4 என குறிப்பிட்டு இருந்தால் அது 3 எண் என வெளியீடு ஆக காட்டி இருக்கும்.

Example 6 : 

    from math import 
    my_num=5
    print(floor(3.7))       - cut down ஐ குறிக்கும்.
    Output :3
மேலே உள்ள from math import என்பது அதிக அளவில் ஆன கணித பயன் படுகளின் போது பயன் படுத்த வேண்டும். Import பற்றி பின்னர் காணலாம்.

Example 6: my_num =5
                    print(ceil(3.7))
Output : 4 
Ceil இன் வேலை கொடுத்துள்ள value வை முழு எண்ணாக மாற்றுவது. அதாவது round போலவே சிறிய விதியாசதுடன்.

Example 7: my_num=5 
                    print(sqrt(36))
Output : 6
Sqrt  இன் வேலை கொடுத்துள்ள number இன் square root (சதுர வேர்) ஐ கண்டறிய உதவும்.

Variables

இது பொதுவாக கொள்கலன்(container) என்று கூறலாம்.அதாவது variables களை. சேமிப்பது என்று கூறலாம்.

Ex: phrase=(" something happen today")
இதில் phrase என்பது தான் variable name(variable பெயர்).

Normal functions 

phrase="something happen"

மேலே உள்ளவாறு phrase என்பது variable என்பது. அதற்குள் ஒரு string ஐ நாம் சேமித்து  வைத்து உள்ளோம்.அதாவது "- use செய்யும் போது அது string ஐ குறிப்பிடும். 

Example 1:
phrase="something happen"
print(phrase.lower())

மேலே உள்ள lower () என்பது குறிப்பிட்டு உள்ள அனைத்து string ஐயும் சிறிய எழுத்தாக மாற்றிவிடும். ()- இப்படி குறிப்பிட்டால் அது functions என கூறுவார்கள்.மேலும் சில எடுத்துக்காட்டுகளை காண்போம்.

Example 2:
phrase="something happen"
print(phrase.upper())
 
Upper என குறிப்பிட்டால் அது அனைத்து எழுத்துகளும் பெரிய எழுத்தாக மாறி விடும்.

Example 3:
phrase="something happen"
print(phrase.islower()) அல்லது phrase="something happen"
print(phrase.isupper()) 

மேலே உள்ளவாறு குறிப்பிட்டால் அது சரி  அல்லது தவறு என்று குறிப்பிடும். 

Output: true or false.

Example 4:
phrase="something happen"
print(len(phrase))

இது string- ன் length ஐ  கண்டறியும்.

Example 5:

phrase="something happen"
print(phrase[0])
இதில். []- குறிப்பிடுவது என்னவென்றால் index value என்பது. String எப்போதும் 0 தில் இருந்தே  ஆரம்பிக்கும்.

Example 6:
phrase="something happen"
print(phrase. replace ("something", "nothing")

இதில் replace என்பது நமக்கு பிடிக்காத ஒன்றை மாற்ற உதவும். முதலில் குறிப்பிடுவது எங்கே மாற்ற வேண்டும் என்றும். அடுத்து குறிப்பிடுவது என்ன மாற்ற வேண்டும் என்பதாகும்.

Data types

Lists(contained information)

List என்பது நமக்கு தேவையான தகவல் களை சேமிக்க உதவும் ஒரு data type ஆகும்.

Example 1:
friends=["anand","arivu",6,77,88]
மேலே உள்ளது போல் list என்பதை நாம் [] - இந்த வடிவில் ஆன குறியீட்டில் நாம் குறிக்க வேண்டும். மேலும் பெயர் அல்லது ஏதாவது ஊர் போன்றவற்றை குறிக்கும் போது " " - string இல் நாம் குறிக்க வேண்டும். நம்பர் போன்றவற்றை குறிக்கும் போது நாம் சாதாரண மாக குறிப்பிடலாம்.

friends=["anand","arivu",6,77,88]
print (friends[1:]) 

மேலே உள்ளவாறு குறிப்பிட்டால் list - இல் உள்ள அனைத்தும் வெளியீடாக வரும்(output).

friends=["anand","arivu",6,77,88]
print (friends[1:3]) 
Output :6

List Functions

1) lucky_numbers=[4,8,9,10,11]
    friends=["Anand","amithap","babu","egalaivan"]
    friends.extends(lucky_number)
    print(friends)
    Output : Anand,amithap,babu,egalaivan,4,8,9,10,11

    Extends என்பது ஒரு லிஸ்ட் உடன் மற்றொரு லிஸ்ட் உடன் சேர்ப்பது.

2) lucky_numbers=[4,8,9,10,11]
    friends=["Anand","amithap","babu","egalaivan"]
    friends. append ("kishore")
    print (friends)
    Output:
    Anand,amithap,babu,egalaivan,kishore

    Append என்பது கடைசியில் ஏதாவது ஒரு தகவல் ஐ சேர்ப்பது.

3) lucky_numbers=[4,8,9,10,11]
    riends=["Anand","amithap","babu","egalaivan"]
    friends. insert(1,"kishore")
    print (friends)
    Output:
    Kishore,Anand,amithap,babu,egalaivan

    இதில் insert என்பது ஒரு தகவல் அல்லது பெயர் ஐ இனைக்க உதவுவது          மற்றும் முன் குறிப்பிடும் எண் எங்கு அதை இணைக்க வேண்டும்                         என்பதையும் குறிப்பிடும்.

4)lucky_numbers=[4,8,9,10,11]
    friends=["Anand","amithap","babu","egalaivan"]
    friends.remove("babu")
    print (friends)
    Output:
    Anand,amithap,egalaivan.

   Remove என்ற செயலி ஒரு தகவலை துண்டிக்க உதவும்.

5) lucky_numbers=[4,8,9,10,11]
    friends=["Anand","amithap","babu","egalaivan"]
    friends.clear()
    print (friends)
    Output:

    Clear என்ற செயலி list இல் உள்ள அனைத்து தகவல்களையும் அழிக்க உதவி செய்யும்.

6) lucky_numbers=[4,8,9,10,11]
    friends=["Anand","amithap","babu","egalaivan"]
    friends.pop()
    print (friends)
    Output:
    Anand,amithap,babu

    Popஎன்பதன் பொருள் அழிதைலை குறிக்கும்.pop() கடைசியில் உள்ள பெய்ர் or நம்பர் ஐ அழிக்கும்.

7) lucky_numbers=[4,8,9,10,11]
    friends=["Anand","amithap","egalaivan","babu"]
    friends.sort()
    print (friends)
    Output:
    Anand,amithap,babu,egalaivan.

    Sort என்பது abcd என்பதன் மூலம் ஒருங்கிணைய செய்யும்.

8) lucky_numbers=[4,8,9,10,11]
    friends=["Anand","amithap","egalaivan","babu"]
    friends.reverse()
    print (friends)
    Output:
    Egalaivan, babu, amithap, anand.

    தலைகீழாக மாற்றும் .ஆனால் abcd என்ற என்ற ஆர்டர்ல் வராது.

9) friends=["Anand","amithap",]
    friends=friends2.copy()
    print (friends2)
    Output:
    Anand, amithap.

    Copy() என்பது முதல் உள்ள தகவல்களை இரண்டவது variable குல் copy               செய்துகொள்ளும்.

Getting input from the users

  • இதன் அர்த்தம் என்பது user(நாம்) எப்படி keyboard மூலம் value களை சேமிப்பது,மற்றும் அதை மாற்றுவது என்று பொருள்.

Example1: 
    name=input("enter your name:")
    print ("hello"+name+"!")

    Output 
    Enter your name: Kishore (press enter)
    Hello, Kishore!

இதன் பயன்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்தவை. மேலும் இது கணித்தத்திற்கு மிகவும் அதிக அளவில் பயன்படுத்தி வரு கின்றனர்.

Example 2:
    num1=input ("enter your first num:")
    num2=input ("enter your second num:")
    result=int(num1)+float(num2)
    print(result)
    
    Output:
    enter your first num:5
    enter your second num:6
    11

மேலும் நாம் result இல் கூட்டல் போன்று கழித்தல், பெறுகள்,வகுத்தல் போன்றவற்றையும் நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

Tuples 

  • Tuples என்பது data types இல் முக்கியமான ஒன்றாகும். இது ஒருவகையான data structures என்று கூறுவார்கள்.
  • இதில் நாம் பல்வேறு விதமான value- களை நாம் சேமித்து வைக்கலாம்.
  • மேலும் இதை immutable என்று கூறுவார்கள். 
  • Immutable என்பது நாம் ஒரு முறை value- வை சேமித்து வைத்த  பிறகு நாம் அதை மாற்ற முடியாது என்பதே இதன் பொருள். 
Examole:
    Coordinates=(4,5)
    print(coordinates [1])

    Output: error 
என் மனம் என்றால் இதை ஒரு முறை சேமித்து வைத்தால் அடுத்த முறை அதை மாற்ற இயலாது. Tuples -i பற்றி பின்னர் தெளிவாக காணலாம்.

Functions

  • Functions என்பது மிக அதிக அளவில் ஆன கோடிங் - ஐ ஒரு குறிப்பிட்ட task ஐ செய்வதற்கு சேமித்து வைப்பது ஆகும்.
  • நாம் எப்போதெல்லாம் functions ஐ பயன்படுத்தும்போதும்  நாம் call functions ஐ use செய்ய வேண்டும்.

Functions 

Functions என்பது ஒரு சிறிய task ஐ மேற்கொள்ள நாம் அதிக அளவிலான கோடிங்- ஐ சேமித்து வைப்பதஆகும்.
Example1:
 
    def sayhi():
        print ("hello user")     
    sayhi()

இதில் def என்பது நாம் எப்போதெல்லாம் functions பயன்படுத்துகிறோம் மோ அப்போதெல்லாம் நாம் def என்ற  function  ஐ use செய்ய வேண்டும் அதன்பின் functionஐ use செய்ய வேண்டும். மேலே sayhi() என்பது ஒரு function மேலும் அதன் முடிவில் நாம் : - இந்த mark ஐ பயன்படுத்த வேண்டும்.print ("hello user") என்பது  சாதாரண மான ஒரு print function தான். sayhi() என்பது function call என்ற கூறுவார்கள். இது கண்டிப்பாக நாம் பயன் படுத்த வேண்டும்.

Example 2:

    def sayhi(): 
        print ("hello user")
    print ("Top")     
    sayhi()
    print ("bottom")

Output :
    Top
    Hello user
    Bottom

முதலில் print("top") என்பதே வெளியீடாக வரும் ஏன் என்றால் முதலில் உள்ள hello user , sayhi() என்ற function KU கீழ உள்ளது. எனவே முதலில்  top வெளியீடாக வரும். பின்னர் sayhai () function ஐ call செய்யும்.call செய்த பிறகு hello user வெளியீடாக வரும். பின்னர் bottom print ஆகும்.

Parameters.

Parameters என்பது சிறிய அளவிலாநா ஒரு தகவல்(information) என்று கூறுவர்.இதை def function இல் mention செய்யவேண்டும். Example:def say_hi(name): - இது போன்று நாம் mention செய்ய வேண்டும்.

Example1 :
    def sayhi(name):
        print ("hello"+name)
    sayhi("Mike")
    sayhi("anand")

Output:
    hello Mike 
    hello Anand.

Example 2: 
    def sayhi(name,age)
        print ("hello"+name+"you are"+str(age))
    sayhi("Mike",35)
    sayhi("anand",18)

Output: 
    Hello, Mike, you are 35
    Hello Anand you are 18

Return statement 

Return statement என்பது value வை return செய்ய உதவும். மேலும் இதன் பிறகு எந்த key words பயன் படுத்தி நாளும் அது வேலை செய்யாது.
Return statement அனைத்து programming language லும் மிக முக்கிய மான ஒன்றாகும்.

Example 1:
    def cube(num):
        return num*num*num
    print (cube(3))

Output: 27

Example 2:
    def cube(num):
        return num*num*num
    result=cube(4)
    print (result)

Output:4

If statement 

If statement என்பது, 
      I wake up 
      If I am hungry
      I eat breakfast 
மேலே உள்ளவாறு நான் காலையில் எழுந்தேன். எனக்கு ஒரு வேளை பசி ஏற்பட்டால் , நான் உண்பேன் . என்று பொருள்.

Example 1:
    i_wakeup=True
    If i_wakeup:
    print ("I eat Breakfast")

If else statement 

I leave my house 
    If it's cloudy 
I bring an umbrella 
    Else:
I bring a sunglass.

Example
    i_leavemyhome=False 
    If i_leavemyhome:
    print ("It's cloudly  so I bring an umbrella")
    else:
    print ("I bring Sunglass")

Or statement 

    iam_black=True 
    iam_tall=True 
    if iam_black or iam_tall:
    print ("your a balck or tall or both")
    else:
    print ("your neither black or tall")

Elif statement

    iam_black=
    iam_tall=
    if iam_black and iam_tall:                               both true
        print("Your a tall black man")
    elif iam_black and not(iam_tall)                      true and false
        print("Your a black man")
    elif not(iam_black) and iam_tall:                            False and True
        print("Your are not a black but tall")  
    else:
        print("your not a black and not tall")

  • மேலே உள்ள வாரு நாம் இரண்டும் true என்று குறிப்பிட்டால் அது your a tall black man என்று வெளியீடாக வரும். 
  • ஒன்று true மற்றொன்று false என்று குறிப்பிட்டால் your a black என்று வெளியீடாக வரும்.
  • ஒன்று false  மற்றொன்று true என்று குறிப்பிட்டால் your not a black but tall என்று வெளியீடாக வரும்.
  • இரண்டும் false என்று குறிப்பிட்டால் அது your not black and not tall என்று வரும்.
இவையெல்லாம் if,if else , or மற்றும் elif statements - ன் சிறப்பு அம்சங்கள்.

Building a better calculator

  • மேலும் இதை பயன்படுத்தி நாம் ஒரு சிறிய calculator ஐ build செய்வோம்.
  • Python இல் நாம் என்னவெல்லாம் எழுதுகிறோம அது string ஆக தான் சேமிப்பு ஆகும். ஆகவே நாம் input இல் குறிப்பிட வேண்டும்.

    num1=float(input("enter the first num"))
    op=input("enter the operator")
    num2=float(input("enter the second num"))
    if op=="+":
        print(num1+num2)
    elif op=="-":
        print(num1-num2)
    elif op=="/":
        print(num1/num2)
    elif op=="*"
        print(num1*num2)
    else:
        print("Invalid Operator")


أحدث الأقدم

Related Posts

إرسال تعليق