செயற்கை கோள் எவ்வாறு வேலை செய்கிறது?
இந்த கால கட்டத்தில் நாம் தொழில்நுட்பத்தை சார்ந்து மட்டும் தான் வாழ்ந்து
வருகின்றோம். அந்த தொழில்நுட்பத்திற்கு ஒரு முக்கியமான ஒரு கருவி என்றால் அது
செயற்கை கோள் தான். ஏன் இது நமக்கு அன்றாட வாழ்க்கையில் பலவேறு முறைகளில்
நமக்கு பயன்பட்டு வருகின்றது.எடுத்துகாட்டாக நம்முடைய தொலைகாட்சி தான்.
தொலைகாட்சி இல்லாத வீடுகளை நாம் எங்கும் கான இயலாது. இந்த பகுதியில் நாம்
எவ்வாறு செயற்கை கோள்வேலை செய்கிறது என்பதையும் அதன் பயன் மற்றும் அதன்
வகைகளையும் காண்போம்.
செயற்கை கோள்
செயற்கை கோள் கிட்ட தட்ட வானில் 4800 க்கும் மேற்பட்ட கோள்கள் ஒரு வட்ட
பாதையில் இன்றும் சுற்றி கொண்டு தான் வருகின்றது.மேலும் அவர்றில்
1750கும் மேற்பட்ட கோள்கள் செயலில் இருந்து வருகிறது.
மேலும் இது மைய விலக்கு மற்றும் ஈர்ப்பு விசை யின் காரணமாக ஒரு வட்ட பாதையில்
சுற்றிக்கொண்டு உள்ளது.
கோள்கள் எப்போதும் தன்னுடைய வேகத்தை குறைக்காமல் சுழன்று கொண்டே
இருக்கும்.
இதற்கு எந்தவித சக்தியும் வெளில் இருந்து தேவை படுவதில்லை.
ஒரு செயற்கை கோள்ஐ வானுக்கு ஏவுவதற்கு முன்பு Van Allen என்ற இடத்தை சரி
பார்த்து தான் விண்ணில் ஏவுவர். ஏஎன் என்றால் இந்த Van Allen என்ற பகுதியில்
அதிக அளவில் ஆன உயர் ஆற்றல் துகள்கள் இருக்கும்,இது செயர்கை கோள்களிள் உள்ள
மின்சாதன பொருட்கள் பாதித்து விடும்.
செயற்கை கோள் கள் வானில் மூன்று பகுதகளாக அனுப்பிவைக்க படுகின்றது.
முதலில் பூமியின் மிக அருகில் உள்ள சுற்றுப்பாதை(Low earth orbit),
நடுத்தர பூமி சுற்றுப்பாதை (Medium earth orbit), உயர் பூமி சுற்று பாதை (High
earth orbit).
மேற்கண்ட இந்த மூன்று பகுதிகளை சுற்றி தான் தேவைகளை பொறுத்து எந்த இடத்தில்
செயற்கை கோள் களை நிறுவ வேண்டும் என்று ஆரசியாளர்கள் முதலில்
கண்டரிவார்கள்.
மிக அருகில் உள்ள சுற்றுப்பாதை (Low Earth Orbit)
- இந்தபகுதியானது பூமிக்கு மிக அருகில் அதாவது 160 முதல் 2000 கிலோ மீட்டர் வரை அமைந்து இருக்கும்.
- இப்பகுதியில் அதிகமாக வானிலை, புவியல் போன்றவற்றிக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
- ஏன் என்றால் இது பூமிக்கு மிக அருகில் இருப்பதால் இதை அதிகமாக தொலை தொடர்புக்கு பயன்படுத்த மாட்டார்கள்.
நடுத்தர பூமி சுற்றுப்பாதை(Medium Earth Orbit)
- இந்த பகுதி கிட்ட தட்ட 2000 முதல் 35000 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும்.
- இப்பகுதியில் கோள்கள் மிக அதிவேகமாக சுற்றுவதால் அதிகமான மக்களுக்கு சரியான தகவல்கள் சேருவதில்லை.
- பூமியை முழுவதும் ஆக்கிரமிப்பு(கவர்)செய்ய மிக அதிக அளவில் ஆன செயற்கை கோள்கள் தேவைப்படும்.
உயர் பூமி சுற்றுப்பாதை(High Earth Orbit)
- இந்த பகுதி தான் மிக அதிக அளவில் தொலை தொடர்புக்கு பயன்படுத்த படுகிறது
- ஏன் என்றால் பூமியில் இருந்து. 35,700 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.
- இங்குள்ள செயற்கை கோள்கள் பூமியை சுற்றிவர கிட்டத்தட்ட 23மணிநேரம் 56நிமிடம் மற்றும் 4வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.இது பூமி சுற்றுவதுக்கு ஆகும் நேரத்தை ஒப்பிட்டு உள்ளது.
- இந்த பகுதியில் ஒரு சிறப்பு வாய்ந்த பகுதி ஒன்று உள்ளது அதன் பெயர் ஜியோ- நிலையம் என்று கூறுவர்.இது மட்டுமே தொலைதொடர்புக்கு ஏற்ற தேர்வாக கருதப்படுகிறது. மிக அதிக தொலைவில் இருப்பதால் தான் நம்முடைய தொலைகாட்சியின் வட்ட தகட்டை அடிக்கடி சரி செய்ய வேண்டி உள்ளது.
இதில் மிக அதிக அளவில் ஆன செயற்கை கோள்கள் அமைந்து இருக்கும்.இது அனைத்தும்
ITU என்ற அமைப்பின் மூலம் பராமரிக்க படுகிறது.ஜிபிஸ் க்காக பூமியில்
இருந்து அதாவது 20, 200கிலோ மீட்டர் என்ற தொலைவில் 24 செயற்கை கோள் கள்
சுற்றிவருகின்றது. இந்த 24 செயற்கை கோள்களே பூமிக்கு போதுமானது.
செயற்கை கோள் பாகங்கள்.
டிரான்ஸ்பாண்டர்:
இது செயற்கைக் கோள்லின் இதயம் ஆக கருதப்படுகிறது.இதன் முக்கிய
வேலை அதிர்வெண்களை மாற்றுவது மற்றும் தேவையற்ற சத்தங்களை நீக்குவது. மேலும்
குறியீடுகளை அதிகமாக பயன் படுகிறது.இதன்(transponder)எண்ணிக்கை 20 ஆக செயற்கை
கோள் லில் உள்ளது.
மேலும் இதற்கு மின் தேவை உள்ளதால் இது மின் கலன் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
மின் கலன் சூரிய தகடு உடன் இணைக்க பட்டு உள்ளது.
சூரிய சென்சார்.
செயற்கை கோள்களின் ஒரு பகுதியில் இது அமைந்து உள்ளது. இது தேவைக்கேற்ப
தன்னை இரவு பகள் பொழுது களிள் தன்னை சுற்றி கொள்ளும்.
த்ரஸ்டர்ஸ் (Thrusters).
இதன் வேலை பூமியை சுற்றி கொண்டு இருக்கும் போது நிலை தவறாமல் இருக்க
பயன்படுத்த படுகிறது. இதற்காக எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது.
இது பூமி நிலையத்தின்(Earth station) மூலம் கண்காணிப்பில் உள்ளது.
மேலும் இதன் வேலை,ஒரு வேளை செயற்கைக் கோள் பழுதடைந்து விட்டால் அந்த செயற்கை
கோள்ஐ ஒரு இடத்துக்கு (grave yard)தள்ளி விடும். இது ஒரு குறிப்பிட்ட கிலோ
மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.
ஜி பி ஸ் கான பாகங்கள்
அனுகடிகாரம் மற்றும் உணர் கொம்பு (antenna) போன்றவை உள்ளது. மேலும் இதன் வேலை
குறியீடுகள் பெற்று கொள்வதாகும்.
Gold plated cover
நாம் அனைவரும் இந்த தங்கநிற தட்டை பார்த்து உள்ளோம்.இது 6 அடுக்காக அமைந்து
உள்ளது. இதன் வேலை சூரியனிடம் இருந்து செயற்கை கோள் பாகங்களை
பாதுகாப்பதாகும்.மேலும் விண்வெளியில் கால நிலை -150 ° யிள் இருந்து சுமார்
200°c கும் அதிகமாக இருக்கும். அவற்றில் இருந்து இதை பாதுகாக்க இந்த தகடு
மிக அதிக அளவில் நமக்கு பயன்படுகிறது.
إرسال تعليق
إرسال تعليق