இந்த பகுதியில் நாம் செயற்கை கோள் ஐ பயன்படுத்தி எவ்வாறு தொலைகாட்சி வேலை
செய்கிறது என்றும் மேலும் நாம் தொலைகாட்சி பார்க்கும் போது எந்த வித பப்பேர்
(Buffer) இல்லாமல் பார்க்கிறோம், என்பதனையும் நாம் காண்போம்.
செயற்கை கோள் பூமியை முழுவதுமாக சுற்ற ஆகும் காலம் 24 மணிநேரம் என்பது நமக்கு
தெரியும். முழுவதுமாக சுற்ற ஆகும் தொலைவு 42,164 கிலோ மீட்டர். இதை நாம்
புரிந்து கொள்ள செயற்கை கோள் உடைய முக்கிய பாகம் மற்றும் எவ்வாறு
செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
ஜியோ ஸ்டேஷனரி பகுதியில் தான் தொலைதொடர்புக்கு தேவையான செயற்கைகோள்கள் அமைந்து
இருக்கும்.
முக்கிய பாகங்கள்.
சூரிய மின்கலன்
செயற்கை கோளுக்கு தேவையான ஆற்றல் (energy) சூரிய தகட்டின் மூலம் பெற்று
கொள்ளும். இரவு நேரங்களில் ஆற்றல் தேவைபட்டால் அதில் பொருத்தப்பட்டு உள்ள
மின்கலம்(battery) மூலம் பகல் நேரங்களில் ஆற்றல் சேமித்து இரவு நேரங்களில்
பயன்படுத்த படும்.
த்ருஸ்டர்ஸ்
இந்த பாகம் தான் செயற்கை கோளின் என்ஜின் ஆக செயல்படுகிறது. விண்ணில்
புவியீர்ப்பு விசை சரியாக இல்லாததால் செயற்கைக்கோள்கள் சரியான நேரத்திற்கு நகர
இயலாது. இதை தவிர்க்கவே த்ருஸ்டர்ஸ் சிறிய அளவில் ஆன ஃபோர்ஸ் ( விசை) ஐ
தந்து அதை சரியான பாதையில் சுற்ற வைக்கும்.
டிரான்ஸ்பாண்டர்
இது கம்யூனிகேஷன்காக பயன்படுத்தப்படும் முக்கிய பாகம். டிரான்ஸ்பாண்டர் அடிப்படை
நிலையத்தில் (base station ) இருந்து குறியீடுகளை (சிக்னல்) பெற்று கொண்டு பின்
அதை பெறுக்க (amplify) செய்து பின் அதில் ஏதாவது சத்தம் ( noice) இருந்தால்
நீக்கி பின் பூமிக்கு அனுப்பிவிடும்.
செயற்கை கோளில் உள்ள உணர்ச்சி கொம்புகளில் இரு வேறுபட்ட அதிர்வலைகள்
பயன்படுத்தபடுகிறது.
- D2H
- KU-(12-18GHZ)
Ku band அதிர்வலைகள் தான் மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏன் என்றால் இதில் அதிக ஆற்றல் மற்றும் அதிக அதிர்வலை உள்ளன.
அதனால் சிறிய அளவில் ஆன பெறும் உணர்ச்சி கொம்புகள் (reciever antenna)
துல்லியமாக குறியீடுகளை பெற்று கொள்ளும். எடுத்து காட்டு: உங்கள் தொலைகாட்சி
தட்டு.
இப்போது எப்படி 100கும் மேற்பட்ட தொலைகாட்சி சேனல் உங்களை வந்தடைகிறது
என்று காண்போம்.
CNN
இவர்களிடம் தான். நாம் பார்க்கும் வீடியோ காட்சிகள் அனைத்தும் இருக்கும். இதை
நாம் நிரல் மூலம் (program சோர்ஸ்) என்று கூறப்படுகின்றது. நிரல் மூலம்
அனைத்தும் 0's மற்றும் 1's மூலம் செயற்கைகோளுக்கு அனுப்பி வைப்பார்கள்.
பின் அதை DBS பெற்றுகொள்ளும்.
DBS(DIRECT BROADCAST SATELLITE)
இவர்கள் எந்த சேனல் இடம் இருந்தும் நிரல் மூலத்தை ஒரு ஒப்பந்தம் மூலம் பெற்று
கொள்வார்கள்.
பெற்று கொண்டே பின் அதை வீடியோ வடிவத்தில் மாற்றுவார்கள்.
மாற்றிய பிறகு அதை ஒரு தொகுப்பாக வேறு ஒரு செயற்கைகோள்லுக்கு அனுப்பி
வைப்பார்கள். வெவ்வேறு பட்ட DBS புரோவிடர் பல்வேறு செயற்கை கோள் ஐ
பயன்படுத்துவார்கள்.
அந்த செயற்கை கோளில் இருந்து உங்களுக்கு 0's மற்றும் 1's அமைப்பின்
மூலம் வந்தடையும். பின் உங்கள் தொகுப்பு பெட்டியில் (set of box) உள்ள
அட்டை (card) மூலம் அது மாற்றப்படும். பின் பார்ப்பது போன்று அமையும்.
Did you know?
தொலைக்காட்சியில் நீங்க நேரடி ஒளிப்பரப்பு பார்க்கும் போது இத்தனை விஷயங்கள்
நடப்பதால் 0.5 விநாடிகள் வரை கழித்து தான் உங்களை வந்தடையும்.
Post a Comment
Post a Comment